நடிகர் சைஃப் அலி கானை குத்தியது யார்? வெளியான பரபரப்பு தகவல்
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
சைஃப் அலி கான்
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் பாந்த்ராவில் உள்ள வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் நடிகர் சைஃப் அலிகான் தூங்கிக்கொண்டிருந்த போது திருடர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்துவிட்டார்.
கத்திக்குத்து
அப்போது கண் விழித்த சைஃப் அலிகான் அவரை பிடிக்க முயன்ற போது, கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியுள்ளார். உடனடியாக, அதிகாலை 3.30 மணியளவில் லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து பேசிய மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி நீரஜ், "உடலில் 6 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 2 காயங்கள் கடுமையானவை. காலை 5.30 மணிக்கு நரம்பியல் நிபுணர் டாக்டர் நிதின் டாங்கே தலைமையில் ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
நேற்று பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரது மனைவி கரீனா கபூர், இரவு தனது சகோதரி கரிஷ்மா கபூர் வீட்டில் தங்கியுள்ளார். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அவர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
விசாரணை
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது கொலை முயற்சியா அல்லது கொள்ளை முயற்சியா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதில், 12 மணி முதல் 2 மணி வரை உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அந்த நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக யாரும் வீட்டிற்குள் நுழையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தாக்குதல் நடத்திய நபர் வீட்டிற்குள்ளே பதுங்கியிருந்த என்ற கேள்வி எழுந்துள்ளது.
சைஃப் அலிகான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பானது விவிஐபிகள் வசித்து வரும் குடியிருப்பு என்பதால் பலத்த பாதுகாப்பு நிலவும் பகுதியில் எப்படி இந்த சம்பவம் நிகழ்ந்தது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.