தோனிதான் பைக் ரேசில் என்னை விட வல்லவர் - நடிகர் ஜான் ஆப்ரஹாம் அதிரடி கருத்து! ரசிகர்கள் உற்சாகம்!
பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் சண்டை மற்றும் சாகச காட்சிகளுக்கு பெயர் போனவர். குறிப்பாக வாகனங்கள் மீது அலாதி பிரியம் உடைய அவர் பைக் ரேஸ்ஸிங்கில் நிறைய ஆர்வம் உடையவர்.
இந்தியாவில் மோட்டார் ரேசிங் பிரபலமான இவர் உதவுவார் என்ற அடிப்படையில் இவரை மோட்டோ ஜிபி நிறுவனம் விளம்பர தூதுவராக நியமித்து உள்ளது.
அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் மகேந்திர சிங் தோனி குறித்து ஒரு சில விஷயங்களை கூறியுள்ளார்.
நான் ஒரு நடிகர் ஆனால் அவர் ஒரு விளையாட்டு வீரர். அவர் பல வருடங்களாக நிறைய மோட்டார் சைக்கிளை வாங்கி தனது வீட்டில் அடுக்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டார் சைக்கிள் மீது அலாதி பிரியம் கொண்ட ஒரு மனிதர் அவர். சற்றும் பயப்படாமல் துணிச்சலாக வண்டி ஓட்டக் கூடிய மகேந்திர சிங் தோனியுடன் பந்தயம் வைத்தால் என்னை அவர் எளிதில் வீழ்த்தி விடுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசிய அவர் தனக்கும் அவருக்கும் நிறையும் ஒற்றுமை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் நிறைய முடி வைத்து தாங்கள் இருவரும் இருப்போம் என்றும்,
அதேபோல பைக் எடுத்து கொண்டு நிறைய தூரம் பயணிக்கும் பழக்கம் தங்கள் இருவருக்கும் இருந்ததாக ஜான் ஆபிரஹாம் தற்போது கூறியுள்ளார்.