Breaking: நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி - Angiogram சிகிச்சையா..?
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமிதாப் பச்சன்
இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பெரும் புகழ் பெற்ற நடிகராக இருப்பவர் அமிதாப் பச்சன். வயதான காரணத்தால், தற்போது நாயகனாக நடிப்பதை தவிர்த்து கதைக்கு முக்கியமான பாத்திரங்களில் நடித்து வருகின்றார் அமிதாப்.
இருப்பினும், பல வரிசை ஹிட் படங்களை அவர் கொடுத்து வருகின்றார். 80 பாலிவுட் மெகா ஸ்டாராக விளங்கிய அமிதாப் பச்சன் தற்போது பான் இந்தியன் படமாக உருவாகியுள்ள பிரபாஸின் "கல்கி", விறுவிறுப்பாக தயாராகி வரும் ரஜினியின் "வேட்டையன்" போன்ற படங்களிலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கு திடீர் என ஏற்பட்ட உடல்நல பிரச்சனை காரணமாக, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அவருக்கு அங்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.