கொரோனா விதிகளை மீறிய பிரியங்கா சோப்ரா - எச்சரித்த போலீசார்!
பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா லண்டனில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதால் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானதால், அங்கு நாடுமுழுவதும் ஊரடங்கு மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் அபராதமும், கடும் தண்டனைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,டெக்ஸ்ட் ஃபார் யூ படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்கின்றனர். இந்த படத்தை ஜிம் ஸ்ட்ரூஸ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஊரடங்கிற்கு முன்பு பிரியங்கா சோப்ரா லண்டன் சென்றார். அங்கு கணவர் நிக் ஜோனாஸுடன் தங்கியுள்ளார்.
தற்போது லண்டனில் கடும் ஊரடங்கு அமலில் இருக்கிறது ,இந்த நிலையில், நேற்று முன்தினம் பிரியங்கா தனது தாயார் டாக்டர் மது சோப்ரா சிகை அலங்கார நிலையத்திற்கு சென்றனர்.
இதைத்தொடர்ந்து ஊரடங்கு விதிகளை மீறிய பிரியங்கா சோப்ராவை போலீசார் எச்சரித்தனர். சலூன் உரிமையாளருக்கு அதிகாரிகள் உரிமையாளர்கள் அபராதம் விதித்துள்ளனர்.