இது கடலா? இல்லை சாலையா? - பளபளக்கும் Salar de Uyuni - பிரமிக்க வைக்கும் வீடியோ

Viral Video Bolivia
By Nandhini Nov 03, 2022 10:42 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

Salar de Uyuni - பிரமிக்க வைக்கும் வீடியோ 

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், தென்மேற்கு பொலிவியாவில் உள்ள பொட்டோசியில் உள்ள டேனியல் காம்போஸ் மாகாண யுயுனி என்ற உப்புத் தளம் உள்ளது.

40000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஏரிகளுக்கு இடையே ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக சாலார் உருவாக்கப்பட்டது, ஆனால் காலப்போக்கில் அனைத்தும் ஆவியாகிவிட்டன.

இந்த உப்புத் தளப் பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் சுமார் 60,000 பார்வையாளர்கள் வருகை தருகிறார்கள். பொலிவியாவில் உள்ள இந்த உப்புத் தளம் கண்ணாடி போல் மெல்லிய தட்டாக பளபளக்கும்.

சுற்றுலா பயணிகளுக்கு இந்த இடம் கண்களை கவர்ந்திழுக்கும். இந்த இடத்தில் சைக்கிள் ஓட்டியும், புகைப்படம் எடுத்தும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்வார்கள்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கத்தில் வருகை தந்திருக்கும் சுற்றுலாப்பயணிகள் இந்த இடத்தில் சைக்கிள் ஓட்டி பொழுதை கழித்து வருகின்றனர்.

இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்க்கும் நெட்டிசன்களின் கண்களை கவர்வதாக அமைந்துள்ளது.

இதோ அந்த வீடியோ -         

bolivia-salar-de-uyuni-viral-video