கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற முன்னாள் அதிபர்
பொலிவியாவின் முன்னாள் இடைக்கால அதிபராக செயல்பட்ட ஜெனீன் சிறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் 2019 ஆம் ஆண்டு அதிபராக ஜெனீன் அனீஸ் என்பவர் செயல்பட்டார். இவர் அதற்கு முன்னால் அதிபராக இருந்த இவோ மொரலீசின் ஆட்சியை கவிழ்ப்பதில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து மொரலீசின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையில் தற்போது ஜெனீன் அனீஸ் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ளார்.
அவர் மீது 22 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இனப்படுகொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மறுத்து வந்த ஜெனீன் அனீஸ் சிறைச்சாலையில் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
மிகுந்த மன உளைச்சலில் இருந்த அனீஸ் தனது கையை அறுத்துக் கொண்டார். இந்நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.