பிணங்களோடு பிணமாக இருந்த நபர் உயிரோடு எழுந்த வந்த அதிசயம்..!
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்ததாக கூறி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த தொழிலாளி திடீரென எழுந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குவிக்கப்பட்ட உயிரிழந்தோர்களின் உடல்கள்
கடந்த 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. இதில் 288 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டையை உலுக்கிய இந்த ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்பு குழு, ஒடிசா மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்பட்ட நிலையில், சிதைந்த உடல்கள் பாலசோரில் உள்ள பள்ளிக்கூட அறைகளில் வைக்கப்பட்டது.
பிணமாக இருந்த நபர் கண் விழித்ததால் பரபரப்பு
இந்த நிலையில், சடலங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஒருவர் நுழைந்த போது அவரது கால்களை இரு கைகள் இறுக்கிப் பற்றிக் கொண்டன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் உற்று கவனித்த போது சடலம் என நினைத்து துாக்கிப் போடப்பட்டிருந்த இளைஞர் உயிருடன் இருக்கிறார் என்பது.
இரு கால்களையும் இழந்துவிட்ட நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த நபர், நான் உயிருடன் இருக்கிறேன் கொஞ்சம் தண்ணீர் கொடுங்க என முனங்கியுள்ளார்.
பின்னர் அந்த இளைஞர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அந்த நபரின் பெயர் ராபின் நையா.
மேற்கு வங்கம் மாநிலம் சர்நேகாலி கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான ராபின் வேலை தேடி முன்பதிவில்லா பெட்டியில் ஏறி இந்த ரயிலில் பயணித்த போது விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.