கடைசி ஆசை: தந்தையின் உடலை தானமாக கொடுத்த மகன்
ஓய்வு பெற்ற பேராசிரியரின் உடல், உடற்கூறு ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடல் தானம்
சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வந்த ஓய்வு பெற்ற கணிதப் பேராசிரியர் லோகநாதன் (75).
இவர் உடல் நலக்குறைவால் கடந்த புதன்கிழமை காலமானார்.
இறப்பிற்கு பிறகு தனது உடலை மருத்துவ மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக தானமாக வழங்க வேண்டும் என்று அவர் முன்பே சென்னை மருத்துவக் கல்லூரியில் ஒப்புதல் படிவம் அளித்திருந்தார்.

அவரது விருப்பத்தின்படி, அவரது மகன் மருத்துவர் இளங்கோவன் மற்றும் குடும்பத்தினர் ஒப்புதல் வழங்கி, லோகநாதனின் உடலை சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்த ஏற்பாடுகளை இந்திய மருத்துவச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சு.மனோகரன் செய்தார்.
இந்நிலையில், அவரது உடலை மருத்துவ மாணவர்கள் கல்வி பயில தானமாக வழங்கிய செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.