எலும்பு கூட்டால் ஆன கிட்டார்: இசைக்கலைஞரின் நெகிழவைத்த செயல்
புளோரிடா நாட்டில் தனது ஆசானின் நினைவாக அவரது ஆன கிட்டாரை பயன்படுத்திய இசை கலைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடாவை சேர்ந்த யூடியூபரும், இசைக்கலைஞருமான பிரின்ஸ் மிட்நைட் எலும்புக் கூட்டில் எலெக்ட்ரிக் கிட்டார் தயாரித்து அசத்தியுள்ளார். தான் சிறுவனாக இருந்த போது தனக்கு கிட்டார் இசைக்கருவியை வாசிக்க கற்றுக் கொடுத்த தனது ஆசானும், உறவினரின் நினைவாக அவரது எலும்புக் கூட்டை கொண்டே எலெக்ட்ரிக் கிட்டார் தயாரித்ததாக பிரின்ஸ் மிட்நைட் தெரிவித்துள்ளார்.
இந்த கருவியை வாசிக்கும் போதெல்லாம் எனது ஆசான் என்னுடன் இருப்பது மாதிரியான உணர்வு கிடைக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். இதை ஒருவிதமான இசை அஞ்சலி எனவும் சொல்லலாம் என தெரிவித்துள்ளார் பிரின்ஸ்.