ஓடும் விமான என்ஜினில் தண்டால் எடுத்து ரீல்ஸ் - சிக்கலில் மாட்டிய இளைஞர்
விமான என்ஜினில் தண்டால் எடுத்து இளைஞர் வெளியிட்ட ரீல்ஸ் வைரலாகி வருகிறது.
விமான என்ஜினில் தண்டால்
சமூகவலைத்தளங்களில் கவனம் ஈர்க்க பலரும் பல்வேறு சாகசங்களை செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதில் விபரீதம் அறியாமல் சிலர் செய்யும் செயல் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.
ஆஸ்திரேலியாவின் சிட்னியை சேர்ந்த பிரெஸ்லி ஜினோஸ்கி(Preslie Ginoski) (23) என்ற பாடி பில்டர், விமான என்ஜினில் தண்டால் செய்து அதை வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
நோட்டீஸ்
இது போன்ற ஆபத்தான ரீல்ஸ்காக இது போன்று ஆபத்தான செயலில் ஈடுப்பட்ட அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விமான நிலைய பாதுகாப்பு நடவடிக்கையில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். இது குறித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விசாரனை முடிவுகளின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிட்னி விமான நிலைய செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
விளக்கம்
இது குறித்து விளக்கமளித்துள்ள பிரெஸ்லி ஜினோஸ்கி, இந்த வீடியோ தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, பெரிதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்த விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம்தான். காற்றின் காரணமாக அசைவு உண்டாகியுள்ளது. இது அனைவராலும் இயக்கத்தில் உள்ள என்ஜின் என தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
Vücut geliştirmeci ve fitness influencerı Preslie Ginoski, Sydney Havalimanı'nda park halindeki bir uçağın motoruna tırmanarak şınav çekti ve kaslarını sergiledi. Bu tehlikeli hareketini videoya alıp TikTok'ta paylaştı. Ancak video, topluluk kurallarını ihlal ettiği için platform… pic.twitter.com/Vl9eoi2gAa
— AirportHaber (@AirportHaber) February 4, 2025
பிரெஸ்லி ஜினோஸ்கி முன்னதாக விமான நிலையத்தில் பணி புரிந்துள்ளார். அப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வேலையில் இருந்து அவர் விலகிய பிறகு, இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.