Thursday, Feb 20, 2025

5 மாதங்களாக பூட்டிக் கிடந்த வீடு.. அழுகிய நிலையில் சடலமாக கிடந்த தந்தை, மகள் -அதிர்ச்சி சம்பவம்!

Chennai Crime Death Murder
By Vidhya Senthil 21 days ago
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் தந்தை, மகள் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

திருமுல்லைவாயில்

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் சங்கர். 70 வயதான இவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதனால் தனது மகளுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயிலில் வீடு எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக அவரது வீடு பூட்டியிருந்தது.

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் தந்தை, மகள் உடல்கள் மீட்பு

இதனால் அந்த பகுதியில், துர்நாற்றம் வீசு தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தனர்.

அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்ட சிறுமி..துடி துடித்து உயிரிழந்த கொடூரம்- நடந்தது என்ன?

அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்ட சிறுமி..துடி துடித்து உயிரிழந்த கொடூரம்- நடந்தது என்ன?

அப்போது படுக்கையறையில் சாமுவேல் மற்றும் அவரது மகள் இருவரும் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இருவரின் உடல்களையும் மீட்ட காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  அதிர்ச்சி சம்பவம்

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், சில மாதங்களுக்கு முன்பு சாமுவேல் சங்கருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில், சிகிச்சையின்போது அவர் இறந்துள்ளார்.

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் தந்தை, மகள் உடல்கள் மீட்பு

இதனால் அவரது மகள், மருத்துவர் எபனேசருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது தள்ளிவிட்டுள்ளார். இதில் அவரது மகள் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவர் சாமுவேல் எபனேசர் என்பவரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.