கப்பல்கள் நேருக்கு நேர் மோதல் - மீட்பு பணிகள் தீவிரம்
Boat
River
Collide
Brahmaputra
By Thahir
அசாம் பிரம்மப்புத்திரா நதியில் படகுகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காணாமல் போனவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அசாமின் பிரம்மபுத்திரா ஆற்றில் லா கமலா என்ற படகு 120 பயணிகளுடன் புறப்பட்டபோது மற்றொரு படகு மோதியதில் ஆற்றில் கவிழ்ந்தது.
இதில் சிலர் நீந்தி கரையேறிய நிலையில் மீதமுள்ளோரை மீட்க மீட்பு படையினர் விரைந்தனர். இன்று காலை நிலவரப்படி ஒரு பெண் ஆசிரியை உயிரிழந்துள்ள நிலையில் 42 பேரை மீட்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
70 பேர் மாயமானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விபத்து சம்பவம் குறித்து அசாம் முதல்வர் பிஸ்வா சர்மா வேதனை தெரிவித்துள்ளார்.