இந்த Headphone, Smart Watch யூஸ் பன்றீங்களா? 75 லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்கள் கசிவு!

Jiyath
in தொழில்நுட்பம்Report this article
75 லட்சம்பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் சைபர் தாக்குதல் மூலம் திருப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கசிந்த தரவுகள்
போட் நிறுவனத்தின் (boAt) தயாரிப்புகளை பயன்படுத்தும் சுமார் 75 லட்சம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தரவுகள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு லேபிள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் ShopifyGUY என்ற ஹேக்கர் டார்க் வெப்பில் வெளியிட்டுள்ளார். இதில் பயனர்களின் பெயர், முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பயனர் ஐடி உள்ளிட்ட தகவல்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பயனர்கள் அதிர்ச்சி
இந்த தகவல்களை கொண்டு இணையவழியில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், தங்களின் கைவரிசையை வெளிப்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த கூற்று ஃபோர்ப்ஸ் இந்தியா அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் பயனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக போட் நிறுவனம் தரப்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச், புளூ டூத் ஸ்பீக்கர், பட்ஸ் உள்ளிட்ட ஆடியோ சாதனங்களை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.