சொகுசு படகு கவிழ்ந்து கோர விபத்து; 22 பேர் பலி - காரணம் இதுதான்.!

Kerala Accident Death
By Sumathi May 08, 2023 03:43 AM GMT
Report

படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படகு விபத்து

கேரளா, மலப்புரம் தனூரை அடுத்துள்ள ஓட்டுப்புறம் கடற்கரை சுற்றுலா தலமாக உள்ளது. விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கடற்கரையில் குவிந்தனர். இந்த பகுதியை ஒட்டி தூவல் தீரம் ஆற்றில் சுற்றுலா படகு சவாரி நடைபெற்று வருகிறது.

சொகுசு படகு கவிழ்ந்து கோர விபத்து; 22 பேர் பலி - காரணம் இதுதான்.! | Boat Overturned Malappuram Major Tragedy In Kerala

இந்நிலையில், கடைசி சவாரியாக சுற்றுலா படகு 40க்கும் மேற்பட்டோருடன் புறப்பட்டது. சுமார் 300 மீட்டர் தூரம் சென்ற நிலையில், ஒரு பக்கமாக சாய்ந்து படகு திடீரென கவிழ்ந்தது. அதனையடுத்து உடனே சிலர் நீரில் குதித்து நீந்திக் கரையை அடைந்தனர்.

21 பேர் பலி

படகு நீரில் கவிழ்ந்து சேற்றில் புதைந்தது. இந்த விபத்தில் 5 குழந்தைகள் உட்பட இதுவரை 22 பேர் தண்ணீரில் மூழ்கி மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 8 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரவு நேரம் என்பதால் மீட்பு பணியிலும் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து விசாரணையில், 25 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய அந்தப் படகில் 40க்கும் மேற்பட்டோரை ஏற்றியதே படகு கவிழ முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

மேலும், பலர் லைஃப் ஜாக்கெட் அணியாமல் இருந்துள்ளனர். டகு சவாரி மாலை 5 மணி வரையே அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 மணிக்கு மேல் படகை இயக்கியதும் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.