கடலில் கவிழ்ந்த புலம்பெயர்ந்தோர் படகு - 5 குழந்தைகள் உட்பட 21 பேர் பலி!
படகு கவிழ்ந்ததில், 5 குழந்தைகள் உட்பட 21 பேர் கடலில் பலியாகியுள்ளனர்.
கவிழ்ந்த படகு
மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு துருக்கி ஒரு பொதுவான பாதையாக விளங்குகிறது. கிரீஸை அடைய முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோர் முன்னதாக துருக்கியை கடக்கின்றனர்.
இந்நிலையில், துருக்கியின் வடக்கு ஏஜியன் கடற்கரை அருகே கடந்து சென்ற ரப்பர் படகு ஒன்று கவிழ்ந்ததில், குறைந்தது 21 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர். முதல் கட்ட விசாரணையில், 5 குழந்தைகள் பலியாகி இருப்பது உறுதியாகி உள்ளது.
மேலும், நீரில் தத்தளித்தவர்கள் மற்றும் அருகிலுள்ள கடற்கரைக்கு நீந்திச் சென்றவர்கள் என 6 பேரை மீட்டு மருத்துவனையில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து, துருக்கிய கடலோர காவல் படையினர் மீட்பு பணியில் இறங்கியுள்ளனர். மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் தெரிவித்ததன் அடிப்படையில்,
21 பேர் பலி
கடலில் மூழ்கியோர் எண்ணிக்கை அதிகம் இருக்கக்கூடும் எனத் தெரிய வருகிறது. விபத்தில் ரப்பர் படகில் எரிபொருள் தீர்ந்து போயிருக்கலாம் அல்லது இயந்திர கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மத்தியதரைக் கடல் பகுதியில் கடந்த ஆண்டு மட்டும் இத்தாலி நோக்கிச் சென்ற படகு, சர்வதேச கடல் பகுதியில் மூழ்கியதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.