இந்திய கிரிக்கெட் அணியை தீர்மானிப்பவர் யார் தெரியுமா? இந்த 5 பேர் தான்... - வெளியான தகவல்...!
இந்திய கிரிக்கெட் அணியை தீர்மானிப்பவர் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியை தீர்மானிப்பவர்
கடந்த ஜனவரி மாதம் புதிய தேர்வுக்குழுவை பிசிசிஐ அறிவித்தது. பதவி நீக்கம் செய்யப்பட்ட சேத்தன் சர்மா மீண்டும் தலைவராக பொறுப்பேற்றார். ஆனால், தேர்வுக் குழுவில் ஹர்விந்தர் சிங்குக்கு மட்டும் இடம் கிடைக்கவில்லை.
இந்திய அணியை தீர்மானிக்கும் இடத்தில் உள்ள 5 நபர்கள் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் (சிஏசி) பரிந்துரையின்படி, அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்ச்பே மற்றும் சுலக்ஷ்னா நாயக், ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரோடோ பானர்ஜி, சலில் அன்கோலா மற்றும் ஸ்ரீதரன் ஷரத் ஆகியோர் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சேத்தன் ஷர்மா தலைவராக தொடர்வார் என்றும், ஸ்ரீதரன் ஷரத் மற்றும் சலில் அன்கோலா ஆகியோர் குழுவில் இணைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தோல்வியை தொடர்ந்து சேத்தன் தலைமையில் இருந்த குழு கலைக்கப்பட்டு, மீண்டும் அவர் தலைமையிலேயே புதிய குழு ஒன்றை கடந்த ஜனவரியில் பிசிசிஐ அமைத்தது குறிப்பிடத்தக்கது.