‘’ பாரு பாரு கலர பாரு ‘’ - 'BMW' கொண்டு வந்த அசத்தல் 'TECHNOLOGY'

technology introduce bmw newcolor
By Irumporai Jan 07, 2022 07:31 AM GMT
Report

உலகின் பிரபலமான சொகுசு கார் நிறுவனமான BMW, தனது  காரின் நிறத்தை மாற்றிக் கொள்வது பற்றி, அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

BMW -அடிக்கடி பல புதிய வடிவிலான கார்களையும், அதில் பல சிறப்பான தொழில்நுட்பத்தையும் அறிமுகபடுத்தும் .ஆகவே, BMW நிறுவனத்தின் கார்களுக்கு, மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.

இந்த நிலையில் அந்த நிறுவனம் தற்போது அசர வைக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆம், சமீபத்தில் சமீபத்தில் லாஸ் வேகாஸ் பகுதியில், எலெக்ட்ரானிஸ் கண்காட்சி ஒன்று நடைபெற்றது  அப்போது BMW ix காரின் மீது தொழில் நுட்பத்தின் உதவியுடன் இதனை விளக்கியுள்ளனர்.

E ink என்பதின் உதவியுடன் இந்த முறையை, காருக்குள் இருந்து ஒரு பட்டனை மட்டும் அழுத்தி, காரின் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.

இந்த E ink என்பது, மனித முடியின் தடிமனுக்கு சமமான விட்டம் கொண்ட, பல மில்லியன் மைக்ரோ காப்ஸ்யூல்களை உடையது. இவை, Postively Charged Pigments மற்றும் Negatively charged pigments ஆகியவற்றைக் கொண்டு இயங்கக் கூடியது.

இத்துடன், மின்சார இணைப்புடன் கூடி, நமக்கு தேவையான கலரை மாற்றிக் கொள்ளலாம். என்னென்ன நிறங்கள் தற்போதைக்கு வெள்ளை, கருப்பு மற்றும் சாம்பல் நிறங்களை தான் BMW நிறுவனம் இதில் இணைத்துள்ளது.

அது மட்டுமில்லாமல், இது ஒரு டிசைன் செய்யப்பட்ட திட்டம் மட்டும் தான் என கூறியுள்ள BMW நிறுவனம், அவர்களின் மின்சார வாகனங்களில், இந்த தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்தி பார்க்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.