ட்விட்டரில் ப்ளூ டிக் பெற .. இந்தியாவில் எவ்வளவு கட்டணம்? - கட்டண விவரத்தால் பரபரப்பு
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியவுடன் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
எலான் மஸ்க்
குறிப்பாக ட்விட்டரில் பணியாற்றிய பல ஊழியர்களை வேலையினை விட்டு அதிரடியாக நீக்கியது உலக அளவில் பரபரப்பினை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ட்விட்டரில் ப்ளுடிக் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற மஸ்கின் அறிவிப்பு பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது.
ப்ளுடிக் கட்டணம்
ப்ளு டிக் வைத்துள்ளவர் 8 டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என அவர் கூறிய நிலையில் இந்தியாவில் உள்ளவர்கள் ப்ளு டிக்கினை பெற ரூபாய் 719 செலுத்தி எந்த வித சரிபர்ப்பும் இன்றி ப்ளூ டிக் பெற்றுக்கொள்ளலாம். என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ப்ளூ டிக் பயனாளர்களின் ஆவண சரிபார்ப்பு நடைமுறை இருந்து வரும் நிலையில் இந்தியர்களுக்கு மட்டும் ஆவண சரிபார்ப்பு இன்றி 719 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது