பொள்ளாச்சி பாலியல் வழக்கு; நல்லா இருக்குய்யா உங்க ரகசிய கூட்டு‌ - விஜய்யை வெளுத்த பிரபலம்

Vijay Coimbatore Crime
By Sumathi May 14, 2025 12:26 PM GMT
Report

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு குறித்து விஜய் கருத்து தெரிவித்திருந்தார்.

விஜய் கருத்து 

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

vijay

இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், "பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு,

குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை வழங்கி, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன்.

பெரியார் சொன்ன இந்த வார்த்தையை பின்பற்றுவது 2k கிட்ஸ் தான் - பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்

பெரியார் சொன்ன இந்த வார்த்தையை பின்பற்றுவது 2k கிட்ஸ் தான் - பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்

விமர்சித்த பிரபலம்

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; நல்லா இருக்குய்யா உங்க ரகசிய கூட்டு‌ - விஜய்யை வெளுத்த பிரபலம் | Blue Sattai Maran Slams Vijay In Pollachi Case

இந்நிலையில், விஜய்யின் இந்தக் கருத்தை தொடர்ந்து பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் பதிவில், "அரை கிலோமீட்டர் நீளத்திற்கு எழுதிய ட்வீட்டில் அதிமுக அரசு என்று ஒருவார்த்தை கூட இல்லை.

இதே திமுக அரசு என்றால் 'ஐயய்யோ சட்டம் ஒழுங்கு சரியில்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லை' என கொதிக்கும் வடைசட்டியில் காலை விட்டது போல குதித்திருப்பார். நல்லா இருக்குய்யா உங்க ரகசிய கூட்டு‌" என்று தெரிவித்துள்ளார்.