பிரபல நடிகரை பிட்டுப்பட நடிகர் என விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் - கடுப்பான ரசிகர்கள்

bluesattaimaran Shanthnu ActorShanthnu
By Petchi Avudaiappan Apr 19, 2022 11:57 PM GMT
Report

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை மறைமுகமாக நடிகர் சாந்தனு விமர்சித்த நிலையில் அவரை மாறன் சரமாரியாக வசைபாடியுள்ளார். 

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு ரிவியூ  தருகிறேன், படம் குறித்த அப்டேட்களை கொடுக்கிறேன் என ஒரு சில பேர் செய்யும் செயல்கள் நாளுக்கு நாள் எல்லை மீறி செல்ல தொடங்கியுள்ளது. இவ்வாறு விமர்சனம் செய்பவர்கள் உருவகேலி, கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி ரசிகர்களுக்குள்ளும் சண்டை இழுத்து விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். 

இதனிடையே  தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சாந்தனு குறித்து போட்டுள்ள ட்வீட் சர்ச்சையை கிளப்பி உள்ளது. சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் படத்தை தரக்குறைவாக விமர்சிப்பவர்களுக்கு எதிராக நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான ஆரி பேசிய வீடியோவை ஷேர் செய்து,  "சரியா சொன்ன மச்சி" என ட்வீட் செய்து இருந்தார். அந்த ட்வீட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் ப்ளூ சட்டை மாறன் இப்படியொரு சர்ச்சை ட்வீட்டை பதிவிட்டுள்ளார். 

மாறன் தனது பதிவில் "பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்களை 'தரமான செருப்படி' என்று மறைமுகமாக கிண்டல் செய்த 'முருங்கைக்காய் சிப்ஸ்' பிட்டுப்பட நடிகர். பதிலடி தந்த சினிமா ரசிகர்கள்." என பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார். இதனைப் பார்த்த ஷாந்தனு "ஒரு படைப்பை அல்லது படைப்பாளியை பயங்கரமா விமர்சனம் செய்யுறதுக்கும் இழிவுபடுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. Hope I'm right" என மீண்டும் தனது கருத்தில் தான் மாறாமல் உள்ளேன் என்பதை நிரூபித்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட்டுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். 

மேலும் ரசிகர்களும், ஒன்னு தெரியுமா மாறா? அந்த முருங்கைக்காய் சிப்ஸ் கூட நல்லாதான் இருந்துச்சு.. உன்னோட ஆன்டி இந்தியனோட ஒப்பிடும்போது!! எனக் கூறி ப்ளூசட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.