கடவுள் முருகர் மற்றும் நடிகர் சூர்யாவின் படத்தை ஒப்பிட்டு ப்ளு சட்டை மாறன் ட்வீட் - நெட்டிசன்கள் பதிலடி
மாம்பழத்தால் பிரச்சனையை சந்தித்த இருவர் என கடவுள் முருகர் மற்றும் நடிகர் சூர்யாவின் படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் இயக்குநர் ப்ளு சட்டை மாறன்.
யூட்யூப் விமர்சகராக பிரபலமானவர் ப்ளு சட்டை மாறன். திரைப்படங்கள் குறித்த இவரது அதிரடியான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பல முறை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல முன்னணி இயக்குநர்கள் ப்ளு சட்டை மாறனின் விமர்சனத்தை கேட்டு அவருக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆண்டி இந்தியன் படத்தின் மூலம் ப்ளு சட்டை மாறன் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ப்ளு சட்டை மாறன் அவ்வப்போது தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கடவுள் முருகரும் நடிகர் சூர்யாவும் இருக்கும் படத்திற்கு மாம்பழத்தால் பிரச்சனையை சந்தித்தவர்கள் என்ற கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ள ஒரு பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
மேலும் சரவணன் சரவணன் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார் ப்ளு சட்டை மாறன்.
சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமூகம் குறித்து தவறாக காட்டப்பட்டதாக கூறி அந்த சமூகத்தினர் மற்றும் பாமகவினர் ஜெய் பீம் படத்திற்கு எதிராகவும் நடிகர் சூர்யாவுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இதனை வைத்து அரசியல் பேசியுள்ளார் இயக்குநர் ப்ளு சட்டை மாறன்.
இந்நிலையில் ப்ளு சட்டை மாறனின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், இனி வரும் காலங்களில் திரைப் படங்களையும், நடிகர்களையும் தரக்குறைவாக விமர்சித்தால் ப்ளு சட்டை மாறன் இயக்குனர் சங்கத்திலிருந்து நீக்கபடுவார் என இயக்குனர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள தகவலை பகிர்ந்துள்ளனர்.