27 ஆண்டுகளுக்கு பிறகு வானில் தோன்றிய Blue moon
பொதுவாக, மாதத்திற்கு ஒரு முறை பௌர்ணமி வரும்.
ஆனால், ஒரே மாதத்தில் இரண்டு முறை தோன்றும் பௌர்ணமியில், இரண்டாவதாக வரும் பௌர்ணமி ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது.
வானில் இந்த ப்ளூ மூன் தோன்றும் நிகழ்வு சுமார் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது.
அந்தவகையில், 27 ஆண்டுகளுக்கு பிறகு "ப்ளூ மைக்ரோ மூன்" என்ற அறிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
#WATCH | Delhi: Visuals of the rare 2026 Blue Moon illuminating the sky over the national capital.
— ANI (@ANI) May 31, 2026
A Blue Moon refers to the second full moon in a single calendar month. pic.twitter.com/0hLGmmf9R1
நிலவு மிகத் தொலைவில் இருக்கும்போது வழக்கத்தை விட சிறிதாக இருப்பதை "மைக்ரோ மூன்" என அழைக்கப்படுகிறது.
மேலும், பூமிக்கு மிக அருகில் நிலவு வரும்போது வழக்கத்தை விட அளவில் பெரிதாக இருப்பதை "சூப்பர் மூன்" என்று அழைக்கப்படுகிறது.
அதன்படி, தலைநகர் டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்த புளூ மைக்ரோ மூன் தென்பட்டது.