இணையதளத்தில் வைரலாகும் நீல நிற இட்லி..!
Viral Video
Idli
By Nandhini
இணையதளத்தில் நீல நிற இட்லி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
சங்கு பூ பலன்கள் -
நீல நிற சங்குப் பூ, தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது.
இந்த சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்துகின்றன. தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும் சக்தி வாய்ந்தது. இப்பூவின் வேர், சிறுநீர்ப்பை நோய்கள், மேகரணம், மாந்தம், காய்ச்சலைக் கட்டுப்படுத்துகிறது.
நீல நிற இட்லி
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சங்குப் பூவை பயன்படுத்தி நீல நிறத்தில் இட்லி செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் உண்மையில் இது சத்தான இட்லிதான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.