ரத்த புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு- அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சாதனை
ரத்தம் மற்றும் எலும்பு புற்று நோய்களை குணப்படுத்தும் மருந்தினை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லேண்ட் கிளினிக் மருத்துவ மையத்தில் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாக புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார்கள்.
தற்போது அதற்கு பலனாக ரத்தம் மற்றும் எலும்பு புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். ரத்தம் மற்றும் எலும்பு புற்றுநோய்களை எதிர்த்து போராடும் டி.இ.டி.ஐ 76 என்ற செயற்கை மூலக்கூறு ஒன்றை உருவாக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த செயற்கை மூலக்கூறு உடலில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கும் திறன் கொண்டது என்றும், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதில் இருந்து சரியாகும் வரை இந்த மூலக்கூறுகள் உடலில் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த செயற்கை மூலக்கூறுகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பது மட்டுமல்லாமல், உடலில் உள்ள உயிரிணுக்களின் ஆயுட்காலம் அதிகரிக்க வழிசெய்யும் என்றும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி செய்தியை தெரிவித்திருக்கிறார்கள்.