இந்த வாரம் ரத்த மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இங்கிலாந்தில் இந்த வாரம் ரத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் இந்த வாரம் சில பகுதிகளில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் மழை பெய்வதுடன், இடி மின்னலுடன் கூடிய கன மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அரிய நிகழ்வாக கருதப்படும் ரத்த மழை என்பது, அதிக அளவில் சிவப்பு நிற தூசு மழை நீருடன் கலந்து பெய்வது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் மற்றும் தென் கிழக்கு பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை காரணமாக நேற்று காலை வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மக்களின் பயணத்துக்கு இடையூறு ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இது போன்ற நிகழ்வு இந்தியாவிலும் ஒருமுறை நடைபெற்றிருக்கிறது. கடந்த 2001-ம் ஆண்டு இந்தியாவின் கேரள மாநிலத்தில் இந்த சிவப்பு மழை பெய்துள்ளது.
சிவப்பு மழை ஆபத்தானதாக தோன்றினாலும் இந்த அரியவகை நிகழ்வுக்கு பின்னால் ஒரு அறிவியல் விளக்கம் உள்ளது. அதாவது, ட்ரென்டெபோலியா அனுலாட்டா எனப்படும் நிலப்பரப்பு ஆல்காவிலிருந்து காற்றில் பரவும் உத்திகளால் கேரளாவில் சிவப்பு மழை பெய்ததாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.