பிளட் மூன் - இந்த அதிசய நிகழ்வு வானில் எப்போது தோன்றும் தெரியுமா?
செப்டம்பர் 7-8ஆம் தேதிகளில் முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
சந்திர கிரகணம்
இந்தியாவில் முழு சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி (2025) அன்று நிகழ்கிறது. பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது, பூமியின் நிழலில் சந்திரன் மறைந்து அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும்.
இது "ரத்த நிலவு" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த blood Moon காட்சியை ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா பகுதியைச் சேர்ந்த மக்கள் தெளிவாகக் காணலாம். இந்த கிரகணம் சுமார் 82 நிமிடங்கள் நீடிக்கும்.
பிளட் மூன்
இது சமீபத்திய ஆண்டுகளில் மிக நீண்ட கிரகணங்களில் ஒன்றாகும். உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 87 சதவீதம் பேர் இதன் ஒரு பகுதியையாவது பார்க்க முடியும். இது 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி முழு சந்திர கிரகணம்.
இது ஒரு கண்கவர் வானியல் நிகழ்வு. இதே போன்ற சந்திர கிரகணம் வருகிற ஜூலை 6, 2028 ஆம் ஆண்டு சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலைக் கடந்து செல்லும்.
அடுத்த முழு சந்திர கிரகணம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தெரியும். சூரிய கிரகணங்களைப் போலன்றி, சந்திர கிரகணத்தை சென்னை போன்ற இந்திய நகரங்களில் வெறும் கண்களால் பார்க்கலாம்.