மயான பாதை அடைப்பு - கிராம மக்கள் தாக்குதல்

Tamil nadu Tamil Nadu Police
By Thahir Sep 21, 2022 11:48 AM GMT
Report

இறந்தவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் மயானப்பாதையை வழிமறித்தவர்களை கிராம மக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயான பாதை அடைப்பு 

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த காளிப்பேட்டை அருகே உள்ள நொனங்கனூரில் 1500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இக்கிராமத்தில் இறந்தவர்களை பொதுவழியின் மூலம் அங்குள்ள மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று நொனங்கனூர் கிராமத்தை சேர்ந்த தாதன் (75) என்பவர் இறந்த நிலையில் அவரின் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்துச் சென்ற போது

பொது வழியின் அருகே உள்ள அதே கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவர் மயானத்திற்கு செல்லும் பாதை தங்கள் பட்டா நிலத்தில் உள்ளது என மயானத்திற்கு செல்லும் பாதையின் குறுக்கே கற்களை போட்டு உடல்களை கொண்டு செல்ல வழி விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மயான பாதை அடைப்பு - கிராம மக்கள் தாக்குதல் | Blockage Of Cemetery Path Villagers Attack

இதனால் இறந்தவரின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால் ஆத்திரமடைந்த உறவினர்கள். உடலை அடக்கம் செய்ய நிரந்தர பாதை வசதி வேண்டும் என இறந்தவரின் உடலை அடக்கம் செய்யாமல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக உடலை வைத்து தர்ணா போரட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் லதா தலைமையிலான காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பொதுவழி பாதையில் இருந்து கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கிராம மக்கள் தாக்குதல் 

அப்போது அங்கு வந்த செல்வம் கற்களை அகற்றியதை தனது சொல்போனில் படம் எடுத்து உள்ளார். நீ ஏன் இதை வீடியோ எடுக்கிறாய் என கிராமமக்கள் கேட்ட பொது செல்வத்திற்கும் கிராம மக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செல்வம் அக்கிராமத்தை சேர்ந்த சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது.

மயான பாதை அடைப்பு - கிராம மக்கள் தாக்குதல் | Blockage Of Cemetery Path Villagers Attack

பின்னர் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து செல்வத்தை துரத்தி சென்று கல் மற்றும் தங்களின் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு பதிலுக்கு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மயான பாதை அடைப்பு - கிராம மக்கள் தாக்குதல் | Blockage Of Cemetery Path Villagers Attack

இதனை தடுக்க முயன்ற காவல்துறையினரையும் கிராம மக்கள் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு உடலை கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.