பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் - 2 பேர் பலி... - அதிர்ச்சி வீடியோ...!

Viral Video Pakistan
By Nandhini Feb 16, 2023 12:20 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டி மீது இன்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

பாகிஸ்தான் ரயில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தானில், குவெட்டா நோக்கிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டி மீது குண்டுவெடிப்பு தாக்குதல் இன்று நடத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

சிச்சாவட்னி ரயில் நிலையத்தை ரயில் கடக்கும் போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இது குறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ரயிலின் பெட்டி எண் 4க்குள் சிலிண்டர் வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், சிலிண்டர் ரயிலின் கழிவறைக்கு பயணி ஒருவரால் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெடிகுண்டு வெடித்த இடத்திலிருந்து தடயங்களை சேகரிக்க போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் புலனாய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு பாகிஸ்தான் மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களை குறிவைத்து தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

blast-pakistan-train-kills-least-2