பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டு வெடிப்பு - ஒருவர் உயிரிழப்பு..!

Pakistan
By Thahir May 16, 2022 08:43 PM GMT
Report

பாகிஸ்தானில் மசூதி அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி மாகாணம் ஹரெடார் பகுதியில் சந்தை மற்றும் மசூதி உள்ளது.

இரவு 10 மணியளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.இதில ஒரு பெண் உயிரிழந்தார். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டு வெடிப்பு - ஒருவர் உயிரிழப்பு..! | Blast Near A Mosque In Pakistan

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புபடையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தியது யார்? இந்த தாக்குதலில் எந்த பயங்கரவாத அமைப்புக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.