கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஓநாய் தாக்குதல் முறை இல்லை - காவல்துறை பரபரப்பு தகவல்
கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் ஒற்றை ஓநாய் தாக்குதல் இல்லை என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
கோவை கார் குண்டு வெடிப்பு
கோவையில் கடந்த மே 23 தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது, காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் தன் தீ விபத்து ஏற்பட்டதாக போலிஸார் தரப்பில் முதலில் கூறப்பட்டது.
ஆனால் கார் வெடிவிபத்தினை ஆரய்ந்த காவல்துறையினர் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. மேலும், வெடி விபத்து நடந்த இடத்தில் கைபற்றப்பட்ட கோலி குண்டுகள், 3 டிரம்கள்,2 கேஸ் சிலிண்டர்கள் ஆகிவற்றை கைபற்றிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
ஓநாய் தாக்குதல்
இந்த நிலையில் கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தீவிரவாத அமைப்புகள் எதிரிகளை அழிக்க பின்பற்றும் ஓநாய் தாக்குதல் என்று தகவகள் வெளியானது. அதாவது ஒரு தீவிரவாதி தனிப்பட்ட முறையில் தானே திட்டமிட்டு நாசவேலையில் ஈடுபடுவதே ஒற்றை ஓநாய் தாக்குதல் என்று கூறுவர்.
காவல் ஆணையர் விளக்கம்
இந்த கார் வெடி விபத்தில் உயிரிழ்ந்த முபின் அவர் வீட்டில் கைபற்றிய பொருட்கள் அவரது கூட்டாளிகள் அப்சர்கான், முகமது அசாருதீன் ஆகியோர் ஓன்றாக இருந்துள்ளதால் இது ஒநாய் தாக்குதல் என்று தகவல் வெளியான நிலையில் .
இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு ஓநாய் தாக்குதல் முறை என கூறமுடியாது என கூறிய அவர் , இந்த சம்பவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பங்கு உள்ளதாக கூறினார்.