ஆப்கானிஸ்தான் மதரசாவில் குண்டு வெடிப்பு - 16 மாணவர்கள் உயிரிழப்பு

Afghanistan Bomb Blast Afghanistan
By Thahir Dec 01, 2022 12:15 PM GMT
Report

ஆப்கானிஸ்தான் சமங்கன் மாகாணத்தில் உள்ள மதரசாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 16 மாணவர்கள் உயிரிழந்தனர்.

16 மாணவர்கள் உயிரிழப்பு 

ஆப்கானிஸ்தானின் சமங்கன் மாகாணத்தில் உள்ள மதரசாவில் வியாழக்கிழமை காலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 16 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Blast in Afghanistan madrasa - 16 students killed

இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, குழந்தைகள் அச்சமின்றி கல்வி கற்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.