சர்ச்சை பேச்சு : திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்
DMK
By Irumporai
திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் சர்ச்சை
விருகம்பாக்கத்தில் நடந்த திமுக கூட்டத்தில் ஆளுநரை பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசிய வீடியோ வைரலானது.
கட்சியிலிருந்து நீக்கம்
இதனைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக, ஆளுநர் மாளிகை புகார் அளித்திருந்த நிலையில் தற்போது சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.