'அக்கா ரூ.1000 எடுத்துக் கொடு' - பேக்கரியில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி ரவுடிகள் மாமூல் வசூல்!

Tamil nadu Crime Thiruvallur
By Jiyath Dec 11, 2023 04:28 AM GMT
Report

பேக்கரியில் இருந்த பெண்ணிடம் பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டி ரவுடிகள் மாமூல் வாங்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரவுடிகள் மிரட்டல் 

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு பகுதியிலுள்ள பேக்கரி கடை ஒன்றுக்கு வந்த ரவுடிகள், பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1000 மாமூல் வாங்கிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 7ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. முதலில் வந்த இரண்டு பேர் அங்கிருந்த கடை உரிமையாளரின் மனைவியிடம் ‘அக்கா ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொடு’ என பணம் கேட்டனர்.

அதற்கு அவர் என்னிடம் பணம் ஏதும் இல்லை என்று கூறினார். உடனே அங்கு வந்த மூன்றாவது ரவுடி அந்த பெண்ணிடம் "எடுடி காசை. குடுடி காசை’ என்று அடிக்கப்பாய்ந்தான். அப்போது அருகிலிருந்த இன்னொரு ரவுடி தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து கடையில் உள்ள பொருட்களை வெட்டி உடைத்தது சேதப்படுத்தினான்.

பள்ளி மாணவிகளை சீரழித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மன்னன் - செல்போன் சோதனையில் அதிர்ந்த போலீசார்!

பள்ளி மாணவிகளை சீரழித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மன்னன் - செல்போன் சோதனையில் அதிர்ந்த போலீசார்!

பணம் பறிப்பு 

தொடர்ந்து ‘காசு கொடுக்கலைனா, கடையை உடைச்சிடுவோம்’ என்று மீண்டும் மீண்டும் பட்டாக் கத்தியால் தாக்குதலில் ஈடுபட்டான். இதனைப் பார்த்து பயந்த அந்த பெண் உடனே தன்னிடம் இருந்த பணத்தை எடுத்து கொடுத்துவிட்டார்.

அதனை பெற்றுக்கொண்ட மூன்று ரவுடிகளும்"கேமரா வச்சிருக்கியா. போலீஸ்கிட்ட போனால் உன்னையும் உன் புருஷனையும் போட்டுத் தள்ளிடுவோம். கேஸ், கோர்ட்டுனு போனா நீங்க இருக்க மாட்டிங்க’ என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வியாபாரிகளையும், பொதுமக்களையும் பீதியடைய வைத்திருக்கிறது. தற்போது இந்த வீடியோ வைரலான நிலையில் மப்பேடு போலீஸார் அந்த ரவுடிகள் குறித்து விசாரணை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.