கரும்புலிகள் நாள் இன்று - நினைவறிக்கை வெளியிட்ட சீமான்

Seeman Naam thamilar katchi
By Petchi Avudaiappan Jul 05, 2021 11:51 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in அரசியல்
Report

 கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நினைவறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் சிக்குண்டிருக்கும் தமிழீழத் தாயகத்தை மீட்பதற்காகவும், தமிழ்த்தலைமுறைகளின் அடிமை விலங்கொடிக்கவும் புறநானூற்றுப்புலிகளாய் போர்க்களம் புறப்பட்டு, தன்னையே ஆயுதமாய் முழுவதுமாக ஏந்தி, விடுதலைத்தாகம் கொண்டு களத்தில் பாய்ந்து உயிரீகம் செய்திட்ட ஒப்பற்ற ஈகைப்பேரொளிகளான கரும்புலிகள் நாள் இன்று! “கரும்புலிகள் அபூர்வமான பிறவிகள். இரும்பு போன்ற உறுதியும், பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். ஒரு கரும்புலி வீரன் தன்னைவிடத் தனது இலட்சியத்தையே காதலிக்கிறான்.

தனது உயிரைவிடத் தான் வரித்துக் கொண்ட குறிக்கோளையே நேசிக்கிறான். அந்தக் குறிக்கோளை அடைவதற்குத் தன்னை அழிக்கவும் அவன் தயாராக இருக்கிறான். அந்தக் குறிக்கோள் அவனது சுயத்திற்கும் அப்பால் நிற்கும் மற்றவர்களின் நலன் பற்றியது.

மற்றவர்கள் இன்புற்று இருக்கவேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம். அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்” என்ற தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கூற்றுக்கிணங்க வீரத்தை உடலாகவும், விடுதலையை உயிராகவும், தாய்மண்ணைத் தத்துவமாகவும், தியாகத்தையே திருவுருவமாகவும் கொண்ட ஈகமறவர்களான கரும்புலிகளின் நினைவை போற்றுவதென்பது ஒவ்வொரு தமிழரின் வரலாற்று பெருங்கடமையாகும்.

தாய்மண்ணின் மீட்சிக்காகவும், தன்னினத்தின் விடுதலைக்காகவும் தன்னையே கொடையாகத் தந்து, தம்முயிர் உறவுகள் விடுதலைக்காற்றை சுவாசித்திட தங்களது மூச்சுக்காற்றையே நிறுத்திக்கொண்ட எங்கள் மாவீரர் தெய்வங்களுக்கு வீரவணக்கம்!" என தெரிவித்துள்ளார்.