‘Black Lives Matter’ இயக்கம் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கபட்டது.

human foundation swedish
By Jon Jan 30, 2021 09:53 AM GMT
Report

 உலகளவிய மாற்றத்தை ஏற்படுத்திய பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கம் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட், பிரோனா டெய்லர் என்ற இரு கறுப்பினத்தவர்கள் காவல்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் காரணமாக பிளாக் லிவ்ஸ் மேட்டர் (black lives matter) இயக்கம் உலகமு முழுவதும் பேசப்பட்டது. கறுப்பினத்தவர் மீதான தாக்குதலை எதிர்த்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதற்கான நோக்கம்.

இந்த இயக்கத்திற்கு சர்வதேச அளவில் பிரபலமான இந்த இயக்கத்திற்கு சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள், விளையாட்டு வீர, வீராங்கனைகள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.  

‘Black Lives Matter’ இயக்கம் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கபட்டது. | Black Lives Matter Nobel

‘Black Lives Matter’ இயக்கம் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கபட்டது. | Black Lives Matter Nobel 

காவல் துறையினரின் மிருகத்தனமான அடக்குமுறைக்கும், இனவெறிக்கும் எதிரான இந்த இயக்கம் உலகளாவிய மாற்றத்திற்கான முதல் படியாக அனைவராலும் முன்னெடுக்கப்பட்டது. தற்போது இந்த இயக்கம் அமைதிக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனைப் பரிந்துரை செய்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான பீட்டர் ஈட், அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.

இந்த இயக்கம் அமெரிக்க கறுப்பினத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறையை மட்டும் எதிர்க்காமல், மற்ற உலக நாடுகளிலும் இனவெறியால் இழைக்கப்படும் அநீதியை உலகுக்கு எடுத்துரைத்தது. அமெரிக்காவில் மட்டும் 20 மில்லியன் மக்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். பிற நாடுகளிலும் மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தனர்.

கிட்டத்தட்ட 93 சதவீத இயக்கத்தின் ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களுக்கோ, பொதுச்சொத்துக்கோ குந்தகம் விளைவிக்காமல் அமைதியான முறையில் நடைபெற்றன. அதனால் இந்த இயக்கத்தை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கபடுவதாக கூறப்படுள்ளது.

2017ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா நாடாளுமன்றத்தில் சோசலிச இடதுசாரி கட்சியின் உறுப்பினராக இருக்கிறார். பீட்டர் ஈட். இதற்கு முன் ரஸ்யா, சீனா நாடுகளைச் சேர்ந்த இரு மனித உரிமை செயற்பாட்டாளர்களை அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கிறார்.

சமூகத்திலிருக்கும் அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டியதால் தான் பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கம் அவரைக் கவர்ந்ததற்கான காரணம். இது கறுப்பினத்தவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கான இயக்கமாக இல்லாமல் பரந்துபட்ட இயக்கமாக உருவானதே பீட்டர் ஈட்டின் கவனத்தை ஈர்த்தது.

பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கத்துக்கு அமைதி நோபல் பரிசு வழங்கபட்டாள், உலகளாவிய இனவெறி அநீதிக்கு எதிரான சக்தியாக உருவாகி சமத்துவம், ஒற்றுமை, மனித உரிமை ஆகியற்றில் அமைதியை நிலைநாட்டுதற்கு ஒரு பாடமாக அமையும் என கூறப்படுகிறது.