சூரியனைவிட 4 மில்லியன் மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு - வைரலாகும் முதல் புகைப்படம்

By Nandhini May 13, 2022 10:27 AM GMT
Report

கருந்துளை என்றவுடன் அது ஏதோ ஒரு துளை என்று நினைத்து விடாதீர்கள்.

கருந்துளைகள் விண்வெளியில் எவ்வித ஒளியையும் வெளிவிடாததாலும் கருநிறத்திலுள்ள ஒருதுளையைப் போன்று தோன்றுவதினாலும் கருந்துளைகள் என அழைக்கப்படுகிறது.

ஒரு நட்சத்திரத்தின் ஆயுட்காலம் நிறைவடையும்போது அது தன்னை தானே வெடித்துக்கொள்ளும். இந்நிகழ்வு ’சூப்பர் நோவா’ என அழைக்கப்படுகிறது.

இந்நிகழ்வின்போது ஏற்படும் வெற்றிடமே கருந்துளைகள் என கூறப்படுகிறது. கருந்துளை என்பது விண்வெளியிலுள்ள வலிமைமிக்கதும் அதிக ஈர்ப்புவிசை கொண்டதுமான ஒரு பொருளாகும். கருந்துளைவேகமாகப் பயணிக்கக்கூடியது ஒளியாகும்.

கருந்துளையின் ஈர்ப்பு விசையிலிருந்து ஒளிகூடத் தப்ப முடியாது. ஒளியே கருந்துளையின் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பமுடியாதென்றால் அப்போ... அதன் ஈர்ப்பு விசையை நீங்களே பார்த்துக்கோங்க...

கடந்த 2017ம் ஆண்டு ஜப்பானில் உள்ள கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் அண்டத்தில் ராட்சத கருந்துளை இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கருந்துளையானது நமது சூரியனை விட ஒரு லட்சம் மடங்கு பெரியதாகும் என்றும் Sagittarius A எனப் பெயரிடப்பட்ட இந்த கருந்துளை சூரியனை விட 400 மில்லியன் மடங்கு பெரியது என்று சொல்லப்பட்டது.

ஆனால், தற்போது சூரியனைவிட 4 மில்லியன் மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பால்வீதி விண்மீன் மண்டலத்தின் மையத்தில் உள்ள பிரம்மாண்டமான கருந்துளையின் புகைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. டெலஸ்கோப்பில் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.