காஞ்சிபுரத்தில் நுழைந்த கருப்பு பூஞ்சை..! இருவருக்கு பாதிப்பு..!
காஞ்சிபுரத்தில் முதன்முறையாக இருவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கே தீர்வு கிடைக்காத நிலையில் புதிதாக கருப்பு பூஞ்சை நோய் உருவெடுத்துள்ளது. குறிப்பாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டோரையே இந்த நோய் தாக்குகிறதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூர் பகுதியை சேர்ந்த மணிக்கொடி என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வந்தார். கண்ணில் தண்ணீர் வடிந்த படி கடுமையாக அவதிப்பட்டுவந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மணிக்கொடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஆண் நபர் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.