இந்தியாவில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 219 பேர் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்!

black-fungal-disease-death.
By Nandhini May 21, 2021 07:25 AM GMT
Report

இதுவரை இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 219 பேர் உயிரிழந்துள்ளதாக பிரபல நிறுவனமான இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ம் அலை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா பிடியில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள். கொரோனா தொற்று ஒரு பக்கம் மனித உயிர்களை பறித்து வரும் சூழ்நிலையில், கருப்பு பூஞ்சை எனும் மற்றொரு நோய் பரவி வருவது மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நபர்களையே இந்த கருப்பு பூஞ்சை நோய் அதிகளவில் தாக்குகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு ஸ்டீராய்ட் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 219 பேர் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்! | Black Fungal Disease Death

இந்த ஸ்டீராய்டு மூலம் சிகிச்சை பெற்றவர்களையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களையும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களையும் இந்த நோய் அதிகளவில் தாக்குவதாக மருத்துவர்கள் பகீர் தகவலை தெரிவித்துள்ளனர்.

சிறு அறிகுறி தென்பட்டவுடன் சிகிச்சை எடுத்துக்கொண்டால் இந்த நோயிலிருந்து தப்பித்து விடலாம். ஆனால், கருப்பு பூஞ்சை நோய் தீவிரம் அடைந்தால் உயிரையே பறிக்கும் அளவுக்கு அபாயம் இருக்கிறது. இந்த நோய் புதிது கிடையாது.

நம் நாட்டில் ஏற்கனவே இருந்த நோய் தான். நம் நாட்டில் ஆண்டுக்கு 10 பேர் இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள். ஆனால், தற்போது அதிக நோயாளிகள் உடல்நலம் குன்றி இருப்பதால் கடந்த 2 வாரமாக கருப்பு பூஞ்சை அதிகளவில் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருப்பு பூஞ்சை நோய் தீவிரம் அடைந்து வருவதால், மத்திய அரசு தற்போது அதை தொற்றுநோயாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில், இந்தியாவில் இதுவரை 7,250 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளது. இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 219 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், அதிகமாக குஜராத், மத்திய பிரதேசம், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது என்றும் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.