ஆளுநர் மீது கற்கள் வீசப்பட்டது என்பது, அபாண்டமான பொய் - பேரவையில் கொந்தளித்த முதலமைச்சர்..!

CmStalin Governor Attack
By Irumporai Apr 20, 2022 07:06 AM GMT
Report

தமிழ,க ஆளுநர் மீது “கற்கள் மற்றும் கொடிகள் வீசப்பட்டது என்பது அபாண்டமான பொய்” என்று  முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தவுடன் நடந்த முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.ஆனால்,அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தினார்.

ஆகவே ,முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று ஆளுநரிடம் வலியுறுத்திய நிலையில்,கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ஆளுநரின் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

இந்த நிலையில் நேற்று தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் பங்கேற்க மயிலாடுதுறை சென்ற ஆளுநருக்கு சில கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் கற்களையும், கொடிகம்பங்களையும் வீசி எதிர்பினை தெரிவித்தாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு பாஜக,அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த நிலையில்,மயிலாடுதுறையில் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

ஆளுநர் மீது கற்கள்  வீசப்பட்டது என்பது, அபாண்டமான பொய் - பேரவையில் கொந்தளித்த முதலமைச்சர்..! | Black Flag For The Governor Cm Stalin Explanation

இன்றைய சட்டபேரவையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில் முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார். அதில், ஆர்ப்பாட்டத்தின்போது ஆளுநர் கான்வாய் மீது கற்கள் மற்றும் கொடிகள் வீசப்பட்டது என்பது அபாண்டமான குற்றமாகும்.

எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஆளுநர் கான்வாய் அந்த இடத்தை கடந்துவிட்டதாக ஆளுநர் பாதுகாப்பு அதிகாரியே விளக்கம் அளித்துள்ளதாக கூறிய முதலமைச்சர் .

ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை அரசியலுக்கு பயன்படுத்த எதிர்க்கட்சி தலைவர் திட்டமிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

மேலும், அதிமுக ஆட்சியில் நடந்த சாத்தன் குளம் கொலை சம்பவம், தூத்துட்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு போன்றவற்றில் அப்போதைய ஆளும் அதிமுக அரசு அமைதியாக இருந்த அதிமுக தற்போது சட்ட ஒழுங்கை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாடியுள்ளார்.