Thursday, Jun 26, 2025

கூட்டணி சஸ்பென்ஸ் உடையுமா..? சென்னை வரும் பி.எல்.சந்தோஷ்!!

Tamil nadu BJP K. Annamalai
By Karthick 2 years ago
Report

பாஜக வட்டாரத்தில் பரபரப்பு' பாஜவுடனான கூட்டணியை அதிமுக முறிந்து கொண்டதை அடுத்து பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் இன்று சென்னை வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

முற்றுப்புள்ளி வைத்த அதிமுக

தொடர்ந்து அவ்வப்போது மோதிவந்த அதிமுக தலைவர்களும் பாஜகவின் மாநில தலைவருமான அண்ணாமலை ஒரு கட்டத்தில் அதனை கைவிட்டு விடுவார்கள் என்றே பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில், பாஜகவுடனான கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி பெரும் சலசலப்பை தமிழக அரசியலில் ஏற்படுத்தியுள்ளது.

bl-santhosh-coming-to-chennai-today-meet-annamalai

இந்நிலையில், டெல்லி சென்று வந்த பிறகும் - தமிழகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகும் கூட கூட்டணி குறித்து பெரிதாக எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த அண்ணாமலை உடல் நிலை பாதிப்பின் காரணமாக பாதயாத்திரையை சற்று தள்ளி வைத்துள்ளார்.

காவிரி நீரை எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டுப் பெற்றுத் தருவோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

காவிரி நீரை எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டுப் பெற்றுத் தருவோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கூட்டணி சஸ்பென்ஸ் உடையுமா..?

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தான் இன்று பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. அவர் சென்னை வரும் பட்சத்தில் அண்ணாமலை மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

bl-santhosh-coming-to-chennai-today-meet-annamalai

அதே போல், தேசிய தலைமை தான் கூட்டணி குறித்து பேசும் என அண்ணாமலை கூறியதை போல, இன்று நிர்வாகிகளை சந்தித்த பிறகு, பி எல் சந்தோஷ் செய்தியாளர்களை சந்திக்கும் போது கூட்டணி குறித்தான ஏதேனும் முக்கிய தகவல்களை அளிக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.