தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் தொழில் அதிபர் கந்தையா பாஸ்கரன் சந்திப்பு
இலங்கை சென்றுள்ள தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தொழில் அதிபர் கந்தையா பாஸ்கரன் அவர்களை சந்தித்து பேசினார்.
அண்ணாமலையுடன் தொழில் அதிபர் கந்தையா பாஸ்கரன் சந்திப்பு
இலங்கை யாழ்பாணத்தில் அண்ணாமலை அழைப்பின் பெயரில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு குறித்து தொழில் அதிபர் கந்தையா பாஸ்கரன் அவர்கள் தெரிவிக்கையில்,
அண்ணாமலை அவர்களின் அழைப்பின் பெயரில் அந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும், தமிழ் மக்கள் எதிர்கொண்டுவருகின்ற பல்வேறு அரசியல், பொருளாதாரப் பிரச்சனைகள் சம்பந்தமாக தமது கலந்துரையாடல்கள் அமைந்திருந்ததாகவும் தெரிவித்த கந்தையா பாஸ்கரன், ஈழத்தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்க பா.ஜ.க. நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அண்ணாமலை தெரிவித்ததாகவும் கூறினார்.

தமிழ் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க பிரதமர் மோடி அக்கறை செலுத்தி வருகிறார்
குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிக அக்கறை கொண்டுள்ளதாக அண்ணாமலை தன்னிடம் கூறியதாகவும் கந்தையா பாஸ்கரன் தெரிவித்தார்.
யாழ்பாணத்தில் நடைபெறும் கலாச்சார மையத்தின் அங்குரார்பண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் பா.ஜ.க. தமிழ்நாடு மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்றுள்ளனர்.