"கொரோனாவை விட கொடூரமானது பாஜக..நாங்கள் அவர்களை தடுக்கும் சோப்பு " - கி.வீரமணி பேச்சு

dmk bjp aiadmk neet veeramani
By Jon Mar 31, 2021 06:38 PM GMT
Report

நீட் தேர்வுக்காக பழமையான வழக்கொழிந்த சாதிப் பழமொழி ஒன்றை மக்களிடம் சொல்லி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாக்கு சேகரித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனை ஆதரித்து ஈக்காட்டுதாங்கலில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்த மண்ணில் காவிகளுக்கும், காளிகளுக்கும் இடமில்லை என்றும் இது பெரியார் மண், காமராஜர் மண், அண்ணா மண், கலைஞர் மண் என்று ஆவேசமானார். கொரோனாவை விட ஆபத்தான கிருமி என்று பா.ஜ.கவை விமர்சித்த கி வீரமணி, கொரோனாவை தடுக்கும் தடுப்பூசி மு.க.ஸ்டாலின் என்றும் கூட்டணிக் கட்சியினர் கிருமியை தடுக்கும் சோப்பு என்றும் திராவிட இயக்கம் தான் கிருமிநாசினி என்றும் குறிப்பிட்டார்.

தமிழக அரசு நீட் தேர்வை கையாளும் முறையை விமர்சித்த, கி,வீரமணி, வழக்கொழிந்த சாதிய பழமொழி ஒன்றை சொல்லி விலங்கான குதிரையை குறிப்பிட்ட இரு சாதிகளுக்குள் அடைத்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.