பாஜக கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றிய பாஜகவினர் - வைரலாகும் வீடியோ
கரூரில் பாரதிய ஜனதா கட்சி கொடி கம்பத்தில் பாஜகவினர் தேசிய கொடியை பறக்கவிட்ட அவமரியாதை ஏற்படுத்தியுள்ளனர்.
75 வது சுதந்திர தினவிழா
இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பாரத பிரதமர் மோடி வீடு தோறும் மூவர்ணக் கொடி என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுத்து நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தேசியக் கொடியை ஏற்றும் போது கடைபிடிக்க வேண்டிய பல்வேறு வழிமுறைகளை அரசு சார்பில் ஏற்கனவே பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
பாஜக கொடி கம்பத்தில் தேசிய கொடி
இந்நிலையில் கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் விதிமுறையை மீறி பாஜக கொடிக்கம்பத்தில் மூவர்ணக் கொடியை அப்பகுதி பாஜக நிர்வாகிகள் பறக்கவிட்டுள்ளனர்.
மேலும், அருகில் அமைந்துள்ள நாம் தமிழர் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளின் கொடிகளுக்கு மிகவும் தாழ்வாக தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தற்போது இது குறித்த வீடியோ அப்பகுதி பொதுமக்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வைரலாகி வருவதுடன், தேசியக் கொடியை அவமரியாதை செய்து விட்டதாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.