பாஜக பெண் நிர்வாகிகள் பற்றி அவதூறு பேச்சு : சைதை சாதிக் மீது வழக்கு பதிவு
தமிழக பாஜகவில் உள்ள தமிழ் நடிகைகளை தவறாக பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சைதை சாதிக் சர்ச்சை பேச்சு
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக தலைவரக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி கூறும் விதமாக சென்னை ஆர்.கே நகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் பாஜகவை சேர்ந்த நடிகைகள் இர்ட்டை அர்த்தத்தில் பேசினார்.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் புயலை கிளப்பியது . இது குறித்து பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் பெண்களை அவமதிக்கும் இவர்கள்தான் கலைஞர்களின் சீடர்களா ? இதுதான் திராவிட மாடலா ? என கேள்வி எழுப்பினார்.
போலீசார் வழக்கு பதிவு
இதற்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தனது ட்விட்டர் பதிவில் மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணியினர் புகார் அளித்த நிலையில் திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.