அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்த பாஜக பெண் நிர்வாகி - கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்….!
கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதால் பாஜகவின் மகளிர் அணி பொறுப்பிலிருந்த மைதிலி வினோவை, அக்கட்சியின் மாவட்ட தலைவர் அதிரடியாக நீக்கியுள்ளார்.
திமுக அமைச்சரை சந்தித்த பாஜக நிர்வாகி
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பாஜக பெண் நிர்வாகி மைதிலி வினோ ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார்.
கோவை மாவட்ட பாஜக மகளிர் அணி பொறுப்பில் இருந்த மைதிலி வினோ திமுகவில் இணைவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மைதிலி வினோவை கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார்.
கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்
இதனைத்தொடர்ந்து பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், " கோவை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி மைதிலி வினோ என்பவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் இன்று முதல் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்.
ஆகவே, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி குறித்த எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது - மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி." என்று தெரிவித்துள்ளார்.
சரிகமப : இறுதி சுற்று போட்டியாளராக தேர்வான ஷிவானியின் நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டுக்கள் Manithan