கடத்தல் குழந்தையை வாங்கிய பாஜக பெண் நிர்வாகி கைது
மருத்துவர்களிடம் ரூ.1.8 லட்சம் கொடுத்து கடத்தல் குழந்தையை வாங்கிய பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
குழந்தை கடத்தல்
உத்தர பிரதேச மாநில பாஜக கட்சியில் முக்கிய பிரமுகராக இருந்து வருபவர் வினிதா அகர்வால். இவரும் அவரது கணவரும் சேர்ந்து மருத்துவர்கள் இருவரிடம் ரூ.1.8 லட்சம் கொடுத்து ஒரு குழந்தையை விலைக்கு வாங்கியுள்ளார்.
பாஜக நிர்வாகி அகர்வால் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் வேண்டும் என விரும்பியுள்ளனர்.
இதற்காக வேறொரு நபரின் குழந்தையை வாங்க முயன்றுள்ளனர். இதற்காக டாக்டர்கள் இருவரை சந்தித்து பேசியுள்ளனர்.
டாக்டர்களின் பின்னணியில் ஒரு கும்பலே இருந்துள்ளது. ரெயில் நிலையத்தில் தனது தாயாருடன் 7 மாத குழந்தை படுத்து உறங்கியபோது அந்த குழந்தையை ஒருவர் கடத்தி கொண்டு ரெயில் ஒன்றை நோக்கி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

பாஜகவில் இருந்து நீக்கம்
இதையடுத்து ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தை பாஜக பிரமுகர் வீட்டில் இருந்தது தெரியவந்தது. வனிதாவிடமிருந்து மீட்கப்பட்ட குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர் போலீசார்.
இதையடுத்து கடத்தல் குழந்தையை வாங்கிய பாஜக நிர்வாகி வினிதா, அவரது கணவர் கிருஷ்ண முராரி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடத்தல் குழந்தையை வாங்கிய வினிதாவை கட்சியிலிருந்து நீக்கி உத்தவிட்டுள்ளது பாஜக தலைமை