ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுகவை தோற்கடித்த பிஜேபி
ஒரு ஓட்டில் திமுகவை வீழ்த்திய பாஜக நகப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரே ஓட்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்ச்சித் தேர்தலில் திமுக அதிமுக மோதலைத் தாண்டி பாஜக , நாம் தமிழர், மக்கள் நீதிமையம் , அமமுக தேமுதிக போன்ற கட்சிகள் தனித்து நின்று போட்டியிட்டன.
இவர்களுடன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாகவும் சில இடங்களில் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 19 தமிழகம் முழுவதும் நடந்த நகர்ப்புற உள்ளாட்ச்சித் தேர்தலின் முடிவுகள் இன்று வாக்கு எண்ணிக்கை முடியும் இடங்களில் அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி, 8 ஆவது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட வேட்பாளர் உமா, ஒரு வாக்கு வித்தயாசத்தில், திமுகவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.