இந்தியாவை பாஜக விரைவில் விற்றுவிடும் - லாலு பிரசாத் குற்றச்சாட்டு

BJP
By Thahir Oct 15, 2022 09:21 AM GMT
Report

பசி பட்டினி இருக்கும் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 107வது இடத்திற்கு சரிந்துள்ளது குறித்து பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

107வது இடத்தில் இந்தியா 

Global Hunger Index எனும் ஐரோப்பிய நாடுகள் சார்ந்த நிறுவனம் ஒன்று, உலக நாடுகளில் குறிப்பிட்ட 121 நாடுகள் அளவில் பசி பட்டினி இருக்கும் நாடுகளின் வரிசை பட்டியலை வெளியிட்டது.

ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை வளர்ச்சி மந்தநிலை, குழந்தைகளின் வாழ்வு வீணாதல், குழந்தை இறப்பு ஆகியவற்றை கணக்கிட்டு இந்த வரிசை பட்டியல் இருக்கிறதாம்.

இதில் 107வது இடத்தில் இருக்கிறது. கடந்த முறை 101வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 6 இடங்கள் சறுக்கியுள்ளது.

லாலுபிரசாத் யாதவ் விமர்சனம் 

இது குறித்து பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் இந்த வரிசை பட்டியல் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பாஜக விரைவில் விற்றுவிடும் - லாலு பிரசாத் குற்றச்சாட்டு | Bjp Will Sell India Soon Lalu Prasad

மீதமுள்ள இந்தியாவை பெரும் முதலாளிகளுக்கு பாஜக அரசு விரைவில் விற்றுவிடும். சூடான் , வங்கதேசம், இலங்கை, ரவாண்டம், நேபாளம் , இலங்கை நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது.

வேதனைக்குரிய செய்தியாகும்.- என பட்டினி பட்டியலில் இந்தியாவின் நிலை குறித்து தனது கண்டனத்தை லாலு பிரசாத் யாதவ் பதிவு செய்துள்ளார்.