பாஜக தமிழ்நாட்டில் வேரோடு அழிந்தே தீரும் - அமைச்சர் மனோ தங்கராஜ்

Tamil nadu R. N. Ravi Governor of Tamil Nadu Mano Thangaraj
By Thahir Jan 06, 2023 02:20 AM GMT
Report

தமிழ்நாடு என்ற பெயரை அழிக்க நினைக்கும் பாஜக தமிழ்நாட்டில் வேரோடு அழிந்தே தீரும் என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட் .

தமிழகம் என்று அழைப்பதுதான் பொருத்தமான

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும் என்றும், ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்பதால் பாரதத்தின் பகுதி தமிழகம் என்பதுதான் சரி ஒரு நிகழ்வில் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்

இதற்க்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிள்ளைக்கு பெயர் சூட்ட பெற்றவர்களுக்கு தெரியாதா ?

பாஜக தமிழ்நாட்டில் வேரோடு அழிந்தே தீரும் - அமைச்சர் மனோ தங்கராஜ் | Bjp Will Lose Its Roots In Tamil Nadu Minister

தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பிகள் அண்ணாவின் தலைமையில் 1968 ஜூலை 18 ல் தமிழ்நாடு என பெயர் சூட்டும் சட்டத்தை சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றினார் தமிழ்நாடு என்ற பெயரை அழிக்க நினைக்கும் பாஜக தமிழ்நாட்டில் வேரோடு அழிந்தே தீரும்.’ எனபதிவிட்டுள்ளார்.