தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடம் இருந்ததும் இல்லை, இருக்கப் போவதும் இல்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்
அரசுக்கு நெருக்கடி என்று நினைப்பவர்கள் கானல் நீரை பார்த்து மகிழ்வது போன்றுதான் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பேச்சு
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், சாதாரணமாக ஆளுநர் பதவி என்பது மாநிலங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.
மாநில அரசு இயற்றும் சட்டங்கள் போன்றவை அரசியல் சாசன சட்டத்துக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை ஆளுநர் பார்க்க வேண்டும்.எனவே தான் அவர்களுக்கு முதல் குடிமகன் என்ற அந்தஸ்து கொடுத்து மாநிலங்களில் வைக்கப்பட்டிருக்கிறது.
இதனால் ஆளுநர்கள் அரசியல் சாராதவர்களாக நடுநிலை வகிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும். அந்த நிலை இப்போது இருக்கின்றதா என்பதை மக்கள் தான் பார்க்க வேண்டும்.
உயர்ந்த அலுவலகத்தின் மாண்பை, மரியாதையை கெடுக்கும் விதத்தில் செயல்படுகிறார்கள் என்பது தான் எண்களின் கேள்வி.
இந்த அரசுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது. ஏனென்றால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, இது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு மகத்தான அரசு.
இந்த திமுக அரசு சிறந்த முறையில் செயல்பட்டு கொண்டியிருக்கிறது. இதற்கு நெருக்கடி என்று நினைப்பவர்கள் கானல் நீரை பார்த்து மகிழ்வது போன்றுதான். வேறு எதுவும் இல்லை என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடம் இருந்ததும் இல்லை, இருக்கப் போவதும் இல்லை. ஏனென்றால் தமிழகத்தின் வரலாறு என்பது ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையிலான வரலாறு.
தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் பாஜகவை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனவும் கூறினார். மேலும், பிரதமர் திருக்குறள் சொல்வது எல்லாம் மாயவேளை, உண்மையாக தமிழ் மீது பற்று கொண்டர்வர்களாக இருந்தால், மாநில மொழிகளை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். இதில் என்ன பிரச்சனை இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.